ஊட்டியை கண்டுபிடித்த கோவை மாவட்ட கலெக்டர் - ஜான் சலீவன்

  |   Coimbatorenews

நீலகிரி மாவட்டத்தை முதன் முறையாக வடிவமைத்தவர் என்ற பெருமை நீலகிரியின் முதல் கலெக்டரான ஜான் சலீவனை சாரும்.

உதகை நகரை நிர்மானித்தவரும், நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இருந்தவருமான ஜான் சலீவன் 1788 ஜூன் 15 ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு வந்த சமயத்தில் 1817 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1819ம் ஆண்டில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த போது, நீலகிரி மலைகளில் ஏறி வந்துள்ளார். கடும் முயற்சியைக் மேற்கொண்டு நீலகிரி மலையைக் கண்டறிந்ததுடன் 1822 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்த பழங்குடியினர், தோடர் இன மக்களிடம் நிலத்தை விலைக்கு வாங்கி பங்களா ஒன்றை கட்டினார்.

காடு, மலைகளாக காட்சியளித்த இந்த நீலகிரியிலும் மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. அதன்பின், கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதிக்கு வந்த அவர், அங்கு ஒரு பங்களாவை கட்டியுள்ளார். தொடர்ந்து காலபோக்கில் கோத்தகிரி கன்னேரி மூக்கு பகுதியில் கட்டப்பட்ட சலீவன் பங்களா கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. இந்நிலையில், 2002ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூ இந்த கட்டிடத்தை புனரமைத்தார்....

போட்டோ - http://v.duta.us/UroGlQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/YtMrnAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬