கிராமத்திற்கு காயலான் கடை பஸ்.. நகரத்திற்கு புதிய பஸ்..

திருமயம்: புறநகரில் இயங்கிய பஸ்கள் தற்போது கிராமப்பகுதியில் டவுன் பஸ்களாக இயக்கப்படுகின்றன. எங்களுக்கு எப்போதும் ஓட்டை உடைசல் பஸ்கள்தானா? என திருமயம், அரிமளம் பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் இன்றளவும் வசூலிலும் பராமரிப்பிலும் தனியார் பஸ்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட புதிய புறநகர் பஸ்கள் தமிழக அரசால் இயக்கப்பட்டது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற போதும் இந்த புதிய பஸ்கள் ஓரிரு வருடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

காரணம் அரசு பஸ் இயக்குவதோடு சரி அதை அவ்வப்போது பராமரிப்பதில் அரசு மெத்தன போக்கையே கையாண்டு வருகிறது. உதாரணத்துக்கு ஒரு பஸ் எந்த இடையூறும் இல்லாமல் இயங்குமேயானால் அது பழுதடையும் வரை இயக்கும் பழக்கம் அரசு பணிமனைக்கு உள்ளது. இதனால் அரசு பஸ் பழுதடையும் வரை எந்த ஒரு பழுது பார்ப்பதற்கும் உட்படுத்தப்படுவது இல்லை. ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை எப்சி என்ற பேரில் அரசு பஸ்களுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டு கழன்று போன நட்டுகளுக்கு பதிலாக புதிய நட்டுகள் மாற்றுவதொடு அரசு பஸ்கள் பராமரிப்பு முடிந்து விடுகிறது. இதனாலேயே புறநகர், டவுன் பஸ்கள் என்ற பாகுடிபாடின்றி அவ்வப்போது பழுதாகி நடுவழியில் நின்று பயணிகளை சோதனைக்குள்ளாக்குவதை அரசு பஸ்கள் வழக்கமாக கொண்டுள்ளன....

போட்டோ - http://v.duta.us/YEaI6AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/6irX0AAA