கோவையில் எம்ஜிஆர், சிவாஜிக்கு படம் காட்டிய ராதா டாக்கீஸ்

  |   Coimbatorenews

ஹோம் தியேட்டர் வசதியுடன் சின்னத்திரையில் படம் பார்ப்பது சவுகரியம் என்றாலும் வெள்ளித்திரையில் பார்க்கும் சுகமே தனி. ஆன்லைன் புக்கிங் வராத காலத்தில்.. நீண்ட வரிசையில் நின்று, கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி, இடைவேளையில் பாப்கார்ன் தின்ற நினைவுகள் பலருக்கும் மறக்க முடியாதது.

தமிழகத்தின் பாரம்பரிய சினிமா தியேட்டர்களில் ஒன்று கோவை மில் ரோட்டில் (அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ்) இருந்த ராதா டாக்கீஸ். கூரை வேய்ந்திருந்தால் தியேட்டரை ‘சினிமாக் கொட்டகை’ என்பார்கள். இதுவும் அப்படி கட்டப்பட்டதுதான். 1929-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி 52 சென்ட் நிலத்தில் கூரைக் கொட்டகையாக வேயப்பட்ட ராதா டாக்கீஸ் திறக்கப்பட்டது. முதலில் நாடகங்கள் அரங்கேறின. 1936-ல் சினிமா தியேட்டராக மாறியது.

ஆங்கிலேயர்கள் உதவியுடன், சுண்ணாம்பு பால் கலந்த கம்பீரமான கட்டிடமாக உயர்ந்தது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்துக்கு 1956ம் ஆண்டு வரை ரூ.185 மாத வாடகை. 76ம் ஆண்டு வாடகை ரூ.525 வசூலிக்கப்பட்டது. பின்னர், ‘முருகன் தியேட்டர்’ என பெயர் மாறியது. கோவையின் பிரபல தொழிலதிபரான பி.ஏ ராஜூ செட்டியார் தியேட்டரை பராமரித்து வந்தார்....

போட்டோ - http://v.duta.us/_MvGxQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/fKXexAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬