சசிகலா மீதான ✈அந்நிய 💸செலாவணி மோசடி😳 வழக்கு

✍இளவேனில்🌄

💸சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில்⛓ இருக்கும் சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 📆1996-97 ஆண்டுகளில் ✈வெளிநாடுகளில் இருந்து 📺ஜெஜெடிவிக்கு எலெக்ட்ரானிக் கருவிகள் வாங்கியதில் பல 💰கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டெட் வாங்கியதில் மோசடி செய்ததாகவும் புகார்😱 எழுந்தது. இதையடுத்து 🤵அமலாக்கத்துறையினர் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய 🏛எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது😐. ஆனால் 💸அந்நிய செலாவணி மோசடி வழக்கில் நீதிபதி கேள்விக்கு 📹காணொலி காட்சியில் பதில்தர சசிகலாவுக்கு 🏛சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் 🏛எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலாவின் தரப்பில் 🏛உயர்நீதிமன்ற உத்தரவு⚖ நகல் சமர்ப்பிக்கப்பட்டது😯. இதனைத் தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு 📄ஆவணங்களை தமிழில் மொழிபெயர்பதற்கான விசாரணையை 📆ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்⚖. அன்று சசிகலா 📹காணொளி காட்சி மூலமாகவும் பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும்😳 என எதிர்ப்பார்க்கப்படுகிறது👀.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬