🏛சென்னை 🚆மெட்ரோ ரயிலில் ஏசி நிறுத்தம்😱

✍இளவேனில்🌄

🏛சென்னை மாநகரம் கடுமையான 💦தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது😟. எந்த நேரத்தில் 🚛லாரியில் தண்ணீர் வரும் என்று தெருவில் 👥மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 👥மக்கள் மட்டும் இல்லை🚫. சென்னை நகரின் பெருமைக்குரிய 🚆மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில், "தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஏசி இயக்கப்படும்😐. மற்ற நேரங்களில் நிறுத்தப்படும்" என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது🔈. இதனை தொடர்ந்து, "சென்னை 🚆மெட்ரோ ரயிலுக்கு தினமும் 🌊9000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஏசிக்கு மட்டும் 7,200 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது😨. மேலும், ஏசியை நிறுத்துவதால், பயணிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது👍. இதற்கு பயணிகள் 💪ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றும் 🚇மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது🙏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬