📆ஜூன் மாதத்திற்கான 💦9.2 டிஎம்சி நீரை திறந்து விட 🏛கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு⚖

✍இளவேனில்🌄

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது 👥கூட்டம் 🏛டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் 🤵மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது🎉. ஆணைய கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். அப்போது, 📆மே மாதம் முடிவதற்குள் காவிரியில் 9.2 💦டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க உத்தரவிட⚖ வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை🙏 வைக்கப்பட்டு உள்ளது. 🌾குறுவை சாகுபடிக்கு ஏதுவாக கர்நாடகம் 📆ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது😯. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு 🏛சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது என தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது🗣. இதை ஏற்று கொண்டு மேகதாது குறித்து எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை. 🏛தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.2 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு 🌊காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு⚖ உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬