டெல்டா மாவட்டத்தில் சுட்டெரித்த அக்னி வெயிலுக்கு நாளை குட்பை

தமிழகத்தில் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலமாக ஆண்டு தோறும் கருதப்படுகிறது.இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் கடுமையானது. கோடை வெயிலின் உச்சம் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. கடந்த 10ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்னி அகோரமாகி அதிக பட்சமாக 105டிகிரிக்கு மேல் 108டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் தாக்கத்தினால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்படுகின்றனர். டெல்டா மாவட்டத்தில் கோடை மழையும் பதிவாகவில்லை. மழை பெய்தால் ஓரளவுக்கு தட்பவெப்பநிலை மாறும். பிற பகுதிகளில் மழைபெய்வதால் இரவு நேரங்களில் காற்றுதான் வீசி வருகிறது. மின்விசிறியை இயக்கினால் கூட அனல்காற்று தான் அடிக்கிறது. கிராம பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்காததால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மரங் கள் இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் செடிகளைக்கூட காணமுடிய வில்லை. ஒரு சில நேரங்களில் லேசான சாரல் மழை வந்தது. இருப்பினும் இந்த நாட்களில் மக்கள் அக்னி வெயில் கொடுமை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மக்கள் பல்வேறு வகை குளிர் பானங்களை அருந்தி வெப்பத்தின் தாக்கத் திலிருந்து விடுபட்டு வந்தனர். மேலும் மதிய வேளைகளில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பஸ் மற்றும் வாக னங்களில் செல்லும்போது அனல் காற்று போல் அடித்தது....

போட்டோ - http://v.duta.us/kjKJPAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/g1sSHgAA