தாராசுரம் மார்க்கெட்டில் பல மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை: வியாபாரிகள் அவதி

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்திலுள்ள நேரு அண்ணா மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி வணிக வளாகத்தில் பல மாதங்களாக லைட்டுக்கள் பழுதால் இருளில்மூழ்கி கிடப்பதால் வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரம் மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகளும், 1000 க்கும் மேற்பட்டசில்லரை காய்கறி கடைகளும் உள்ளன. மார்கெட்டிற்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகம் முழுவதிலிருந்தும் பல்வேறு காய்கறிகள் லாரி மூலம் வருகின்றது. இதன் மூலம் தினந்தோறும் 1000 டன் காய்கறிகளும் சுமார் ரூ. 2 கோடிக்கு விற்பனை நடைபெறும். மேலும் விஷேச நாட்களில் விற்பனை அதிகரிக்கும். தாராசுரம் காய்கறி மார்க்கெட் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட் என்ற சிறப்பு உண்டு. இத்தகையை பெருமை பெற்ற தாராசுரம் மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் உள்ளன. இவற்றில் 25 மின் விளக்குகள் கூட எரிவதில்லை. இதே போல் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் மற்றும் கும்பகோணம் நகராட்சி காய்கறி வணிக வளாகம் என்ற பெயர் பலகையில் உள்ள டிஜிட்டல் லைட்டுகள் எரியாமல் உள்ளது....

போட்டோ - http://v.duta.us/AOn1WAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/SKOowwAA