நாளைக்கு வந்துருங்க... கோவையில் பாரம்பரிய இசைக்கருவிகளின் கண்காட்சி

  |   Coimbatorenews

கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் செய்தித்துறை சார்பில் 34வது அரசுப்பொருட்காட்சி தற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு பொருட்களின் கண்காட்சியும், கேளிக்கை விளையாட்டுகளும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு துறைகளின் சார்பில் பல்வேறு அரங்குகளும் அமைக்கபட்டுள்ளது. நாளை (29-05-2019) காலை 10.30 மணியளவில் நமது இந்த பண்டைய காலத்தின் இசைக்கருவிகளின் கண்காட்சி நடைபெறுகிறது.

தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்காட்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்கும். மக்கள் கண்டிராத யாழ் மற்றும் பல்வேறு நரம்பு கருவிகள் போன்ற பல இசைக்கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இது குறித்து அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் கூறியதாவது..

மனிதன் பிறப்பு முதல இறப்பு வரை இசையோடு வாழ்கின்றோம். தற்போது பல விதமான இசை கருவிகள் இருந்தாலும் நமது பாரம்பரியமான இசைக் கருவிகள் ஏராளம் ஆனால் பயன்பாட்டில் குறைந்த அளவே ... இந்த இசைக் கருவிகளை பொதுவாக காற்று கருவிகள், நரம்பு கருவிகள், தோற் கருவிகள் என்று 3 வகைகளாக பிரிந்து நமது முன்னோர்கள் பயண்படுத்தி வந்தனர்கள் அவற்றில் யாழ் என்னும் பண்டைய நரம்பு கருவி இன்று பயண்பாட்டில் இல்லாமல் உள்ளது....இதன் வளர்ச்சியாக வீணை இன்று பயன்பாட்டில் உள்ளது....

போட்டோ - http://v.duta.us/pfiZSQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/kqu_6AAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬