புளியங்குடி வனப்பகுதியில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ 4வது நாளாக பற்றி எரிகிறது

புளியங்குடி: மேற்குத்தொடர்ச்சி மலையில் மின்னல் தாக்கியதில் புளியங்குடி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ, தொடர்ந்து 4வது நாளாக எரிகிறது. 100 வன ஊழியர்கள் மற்றும் பழங்குடியினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்தில் சோமரந்தான், டி.என்.புதுக்குடி, புளியங்குடி, கோட்டமலை, செல்லுப்புளி, வாசுதேவநல்லூர், நாரணபுரம், தெற்கு மற்றும் வடக்கு தலையணை ஆகிய 9 பீட்கள் உள்ளன. இங்கு வன உயிரினங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 25ம் தேதி மாலை 3 மணியளவில் புளியங்குடி வனச்சரகம் செல்லுப்புளி பீட் பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் பாறைகள் வெடிப்பு உண்டாகி தீப்பொறி ஏற்பட்டு தீ பரவியது. இதேபோல் கோடை வெப்பம் காரணமாக காய்ந்து காணப்பட்ட மூங்கில் மரங்களில் தீப்பற்றி பரவியது. இதில் மூங்கில் மற்றும் யானைகள் விரும்பி உண்ணும் ஈத்தல், காய்ந்த மரங்கள், புற்கள் போன்றவை பற்றி எரிந்து வருகின்றன.

தகவலறிந்து புளியங்குடி வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனவர் அசோக்குமார், மற்றும் வனஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர், வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டனர். ஆனால் வெயில் 104 டிகிரி வரை இருந்ததாலும், பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதாலும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து மாவட்ட வனஅலுவலர் திருமால் தலையணை பகுதியில் 2 நாட்கள் முகாமிட்டு தீ பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டார்....

போட்டோ - http://v.duta.us/EHgMrQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/4L2rLgAA