📆மே மாதத்திற்குள் காவிரியிலிருந்து 💦2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட 🏛தமிழக அரசு கோரிக்கை🙏

✍இளவேனில்🌄

🌊காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3வது கூட்டம் 🏛டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் 🤵மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது👍. ஆணைய 👥கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். அப்போது, "📆மே மாதம் முடிவதற்குள் 🌊காவிரியில் 2 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும்⚖" என்றும், "மேகதாது அணை திட்டம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து இனிவரும் கூட்டங்களில் விவாதிக்க🗣 கூடாது❌" என்றும் தமிழக அரசு சார்பில் 🙏கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து, "🌾குறுவை சாகுபடிக்கு ஏதுவாக கர்நாடகம் 📆ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும்😯. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும்⚖ கர்நாடகம் நீரை திறந்து விடுவது இல்லை🚫. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு 🏛உச்சநீதிமன்றத்தின் உத்தரவை⚖ மீறுவதாக🙄 உள்ளது" என்று 🏛தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது🗣 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬