சோலார் பேனல் மோசடி வழக்கு சரிதா நாயர் மாஜி கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடைய சரிதா நாயரின் முன்னாள் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவையில், சோலார் பேனல் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சரிதாநாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீதான வழக்கு விசாரணை கோவை ஜே.எம். 6 கோர்ட்டில் நடக்கிறது. பிஜூ ராதாகிருஷ்ணன் தவிர மற்ற இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பிஜூ ராதாகிருஷ்ணன் மீது, கேரளாவில் பல்வேறு மோசடி வழக்கு மற்றும் அவரது முதல் மனைவி கொலை வழக்கு விசாரணை முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கோவையில் நடந்த மோசடி வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி பிஜூ ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது சோலார் பேனல் நிறுவன மோசடிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்நிறுவனத்தில் சாதாரண ஊழியராக வேலை பார்த்தேன். கேரள நீதிமன்றங்களில் என் மீது குற்றம்சாட்டப்பட்ட அனைத்து வழக்கிலும் விடுதலையாகி விட்டேன். கோவை வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்காததால், சிறையிலிருந்து வெளியே வரமுடியவில்லை. இந்த வழக்கில் இருந்து என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்,’’ என ராதாகிருஷ்ணன் வாதிட்டார். விசாரணையின் முடிவில் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் கண்ணன் உத்தரவிட்டார். மேலும் மற்ற வழக்குகளில் விடுவிக்கப்பட்டதற்கான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

போட்டோ - http://v.duta.us/hfXi9wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HPS8fgAA