புதுவை மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் நினைவுகளை விட்டு செல்லும் காலம் வந்துவிட்டது: நாளை விடைபெறும் கிரண்பேடி உருக்கமான கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன் என புதுச்சேரி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கவர்னர் கிரண்பேடி உருக்கமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நாளை நிறைவடைய உள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி மக்களுக்கு அவர் ேநற்று திறந்த மடல் ஒன்றை சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில், நான் இன்றுடன் (29ம் தேதி) என்னுடைய மூன்றாண்டு காலத்தை கவர்னராக நிறைவு செய்கிறேன். என் பணியின் நினைவுகளை விட்டு செல்லும் காலம் வந்துவிட்டது. இவைகளில் பல சின்னங்களாக பொறிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சொற்படிதான் நடக்கிறேன். என்னுடைய மன உளைச்சல் தொடர்பான விவரங்கள் உட்பட, அன்றாட வேலைகளை உடனுக்குடன் திட்டமிடுகிறேன்.

முதல்வர் நாராயணசாமி, மக்கள் பிரதிநிதிகள் கவர்னர் மாளிகையில் இருந்து, புதுச்சேரிக்காக அதிகபட்ச சேவையை பெற்றுக்கொண்டதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சில ரவுடிகளை தவிர, அனைவரும் சட்டத்தை மதிப்பவர்கள்தான். மக்களின் பொறுப்பையும், உழைப்பையும், பொறுத்து முன்னேற்றத்துக்கான அனைத்து தேவைகளையும் பெற்றுள்ளது. இதில் நல்ல அரசியல் தலைமை, அதிகாரிகளின் அணுகுமுறைகளை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாகத்தின் பொருட்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் புதுச்சேரிக்காகத்தான். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு கைப்பேசி பயன்பாட்டின் மூலம் தடம் பதிக்கப்படும். நான் புதுச்சேரியின் அனைத்து தேவைகளையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

போட்டோ - http://v.duta.us/dfPAfwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/9XChZgAA