மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு போராட்டத்தை மீறி தீவிரமடையும் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள்: போலீஸ் பாதுகாப்புடன் அத்துமீறும் நிறுவனங்கள்

மயிலாடுதுறை: மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்களின் போராட்டத்தை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாக நடந்து வருகிறது.மக்களவை தேர்தல் சமயத்தில் பாஜக, அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் காவிரி படுகையில் வருகின்ற எண்ணெய் எரிவாயு ஹைட்ரோகார்பன் பேரழிவு திட்டங்களை எதிர்ப்பதாகவும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாகவும் வாக்குறுதி அளித்தன. சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி என பல்வேறு இடங்களில் கட்சிகளும் அமைப்புகளும் விவசாய சங்கமும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தினசரி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதேபோல நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம், தமிழ் தேச மக்கள் முன்னணி. ஆகிய அமைப்புகள் பல்வேறு தோழமை இயக்க சக்திகளோடு இணைந்து கெயில் குழாய் பதிப்பதற்கு எதிராக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள மாதானம் முதல் மேமாத்தூர் வரை உள்ள 29 கிலோ மீட்டரில் அமைந்திருக்கின்ற பல்வேறு கிராமங்களில் விளைநிலங்களில் விவசாய பயிர்களை அழித்து அத்துமீறி நுழைந்த கெயில் நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனமான துலானி நிறுவனத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்தும் காவல்துறையின் ஒடுக்குமுறையை எதிர்த்தும் மே முதல் வாரத்தில் இருந்து போராட்டங்களை நடத்தி வந்தது....

போட்டோ - http://v.duta.us/mhDpugAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/G37ASgAA