மு.க.ஸ்டாலின்: 🔈"குடிநீர்த்💧 தட்டுப்பாடு தீர்க்க போர்க்கால நடவடிக்கை தேவை"

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர்💧 பஞ்சம் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆய்வு செய்து🔍, போர்க்கால அடிப்படையில் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்🙏 விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை📜:

""தமிழகம் முழுவதும் வரலாறு காணாத கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் ஒரு குடம் பத்து ரூபாய் என்று குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடும் அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது."

சென்னை மாநகருக்கு நீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை உரிய காலத்தில் தூரெடுத்து ஆழப்படுத்தாமலும், மழைக் காலங்களில் தண்ணீரைச் சேமித்து வைக்கத் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்காததாலும் அந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.

"காவிரியில்🏞 தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் முயற்சிக்கவில்லை. கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதிலோ, நெம்மேலி கடல்நீர் குடிநீர் திட்டத்திலிருந்து 100 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது என்று சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிப்பதிலோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை."

"🌊கடலோர மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியிருந்தால்கூட இவ்வளவு மோசமான தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்திருக்க முடியும். குடிநீருக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை மறியல்களும்✊, போராட்டங்களும், குடிநீர் பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மக்கள்👥 தவித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. எனவே, குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை📑 நிறைவேற்றிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும்."

குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளை, அதிகாரிகளுடன் சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் உடனே ஆய்வு செய்ய வேண்டும்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬