100 நாள் வேலை திட்ட விவகாரம் பிடிஓவை சிறைபிடித்த பெண்கள்

திருச்சுழி: திருச்சுழி யூனியன் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 100 நாள் வேலை திட்ட பெண்களை, பெண் அதிகாரி ஒருவர் ஒருமையில் பேசியதை கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, ஆலடிப்பட்டி ஊராட்சியில் மீனாட்சிபுரம், மேலக்குருணைக்குளம், கீழக்குருணைக்குளம், ராமசாமிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, 100 நாள் வேலை திட்டத்தில் 30 முதல் 40 நாள் வரை வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்கக்கோரி, 3 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர், திருச்சுழி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் நீதிராஜன் தலைமையில் திருச்சுழி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) சத்யவதியை நேற்று சந்தித்து மனுக்களை அளித்தனர்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், ஆலடிப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை கொடுத்தால் செய்ய மறுப்பதாக தெரிவித்தனர். இதனால் பெண்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண் அதிகாரி ஒருவர், பெண்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைக்கண்டித்து கிராமப் பெண்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யவதியை அறையிலிருந்து வெளியேற விடாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சிறைபிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரெட்டியபட்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். நூறுநாள் வேலைதிட்டத்தில் பணி வழங்க உறுதியளித்தை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

போட்டோ - http://v.duta.us/PrnrCgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/bJ5I8QAA