அடிப்படை வசதியில்லாமல் கசியும் தண்ணீருக்காக காத்து கிடக்கிறோம்: வேதனையில் ஓரிவயல் ஊராட்சி மக்கள்

சாயல்குடி: கடலாடி அருகே ஓரிவயல் ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஓரிவயல் ஊராட்சியில் ஓரிவயல், காலனி, கிழக்கு தெரு, பனைக்குளம், ஓரிவயல் கொட்டகை, ஒத்தவீடு போன்ற கிராமங்கள் உள்ளன. இப்பஞ்சாயத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், பொது கழிவறைகள், சாலை வசதிகள் இல்லை. இரவில் தெருவிளக்கு எரிவது கிடையாது என எவ்வித அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக இப்பகுதி கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஓரிவயல் பொதுமக்கள் கூறும்போது, கிராம மக்கள் பயன்பாட்டிற்கு 3 குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. தரமின்றி கட்டப்பட்ட, சேதமடைந்த இத்தொட்டியுடன் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் இத்தொட்டியிலிருந்து தெருக்களுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து சேதமடைந்து விட்டது. இதனால் இத்தொட்டிகள் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. சாலை மார்க்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் செல்லும் குழாயிலிருந்து கசியும் தண்ணீரை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காத்து கிடந்தால் வெறும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே பிடிக்க முடியும் என்ற நிலையில் பிடித்து வந்தோம், ஆனால் கடந்த சில மாதமாக இத்தண்ணீரும் முறையாக வருவதில்லை. இதனால் சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசியும் நீரை காத்து கிடந்து அள்ளி, தள்ளுவண்டியில் வைத்து தள்ளிவரும் நிலை உள்ளது....

போட்டோ - http://v.duta.us/brU7KQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/XbFDcwAA