அன்னூர் காட்டம்பட்டி குளத்தை சீரமைக்க களம் இறங்கிய தன்னார்வலர்கள்; நேற்று 2-ம் கட்ட களஆய்வு

  |   Coimbatorenews

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் உள்ள கடத்தூர் குளம் 30 வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. அப்பகுதியின் முக்கிய ஆதாரமாக விளங்கிய இந்த குளத்தின் நீர்வழிப்பாதைகள் அக்கிரமிப்புகளாலும், முட்புதர்களாலும் அடைக்கப்பட்டு தண்ணீர் செல்லமுடியாதவாறு உள்ளது. இதனை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தன்னார்வலர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, காட்டம்பட்டி வளர் இளம் நற்பணி சங்க நண்பர்கள் மற்றும் ஓரைக்கால்பாளையம் நேரு இளைஞர் மன்ற தன்னார்வலர்கள் இணைந்து குளத்தை சீரமைக்க ஆலோசனை இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் 2-வது கட்ட ஆலோசனை மற்றும் கள ஆய்வு நேற்று நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் காட்டம்பட்டி குளத்தை தூர் வாருதல், 6 கி.மீ தூரமுள்ள நீர்வழிப்பாதையை தூய்மை படுத்துதல் போன்ற களப்பணிகளை மேற்கொள்ள ஆய்வுகள் நடத்தப்பட்டது

இது குறித்து அவ்வமைப்பினர் கூறியதாவது..

கோவை மாவட்டம்,அன்னூர் வட்டத்திற்குட்பட்ட கடந்த 30வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்படும் சுமார் 120ஏக்கர் பரப்பளவுள்ள கடத்தூர் குளம் என்ற காட்டம்பட்டி குளத்தை புத்துயிரூட்டுவதற்கான ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கடந்த வாரம்த முதல் கட்ட ஆய்வு 6கிமீ தூரத்திற்கு நடந்தது.இந்த வாரம் இரண்டாம் கட்டமாக 5கி.மீ தூரத்திற்கு நீர் வரும் வழித்தடம் ஆய்வு செய்யப்பட்டது. இன்னும் சுமார் 6கி.மீ தூரமுள்ள இரண்டு நீர்வழிப்பாதைகள் இரு கட்டங்களாக ஆய்வு நடத்திட முடிவு செய்யப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/EiuhtwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/xRVCCgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬