அரபிக்கடலில் உருவாக உள்ள புயலால் நிலப்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை: சென்னை வானிலை மையம் தகவல்

  |   Chennainews

சென்னை: அரபிக்கடலில் உருவாக உள்ள புயலால் நிலப்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், லட்சத்தீவை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கிழக்கு, மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாகவும் மாறக்கூடும். இதனால், தரைப்பகுதியில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை. கடலில் தான் மழை பெய்யும். எனவே, மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

தென்மேற்கு பருவமழையால் இம்முறை வழக்கத்தை விட குறைவாகவே மழை கிடைக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். புயல் 5 நாட்கள் கடந்து குஜராத்தை அடைய உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், திருவள்ளூர், சென்னை, புதுச்சேரி, திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட மத்திய, வட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் அனல் காற்று வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. திருத்தணியில் வெயில் 42 டிகிரி செல்சியசாக பதிவானது என்று கூறியுள்ளார்....

போட்டோ - http://v.duta.us/fay17AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/90wafAAA

📲 Get Chennainews on Whatsapp 💬