ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி... நாளை துவக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் நாளை (11ம் தேதி) முதல் புலிகள் உள்ளிட்ட அனைத்து வன விலங்கு கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்சிலிப், அமராவதி, உடுமலை என 6 வனசரங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டுப்பன்றி, உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு, கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி என இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் குளிர்கால வன விலங்கு கணக்கெடுப்பு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது, கண்ணில் தென்பட்ட மற்ற விலங்குகளும் கணக்கெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் 4 வனச்சரகங்களிலும், கோடை கால புலிகள் உள்ளிட்ட பிற வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாளை 11ம் முதல் 17ம் தேதி வரை என மொத்தம் 7 நாட்கள், கோடைக்கால வன விலங்கு கணக்கெடுப்பு நடக்கிறது. கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர், வேட்டை தடுப்பு காவலர்கள், வனவர், தன்னார்வலர் கொண்ட குழுவினர்களுக்கு இன்று(10ம் தேதி) வால்பாறை மலைப்பாதையின் உள்ள அட்டகட்டியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் முடிந்தவுடன், தனித்தனி குழுவாக வனப்பகுதிகளுக்குள் சென்று, நாளை வனவிலங்கு கணக்கெடுப்பில் ஈடுபடுவார்கள் என்றும். வன விலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்படும். அவை தயாராக உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டோ - http://v.duta.us/DMHwEQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/QyAOBgAA