இனிதே முடிந்தது 1 வருடம்; 52-வது வார களப்பணியில் Target Zero

  |   Coimbatorenews

பிளாஸ்டிக் மீதான தடையினை அடுத்து மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதை குறித்து விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் ஆழியாறு - வால்பாறை வனப்பகுதிகளில் Target Zero அமைப்பு இளைஞர்கள் குழு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற களம் இறங்கியுள்ளனர். சமவெளிப்பகுதிகளை விட மலைப்பகுதிகளில் மிகபெரிய சவாலாக இருக்கும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு களப்பணியை கையில் எடுத்து கடந்த 52 வாரங்களாக செயல்படுத்தி வருகிறது..

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் டார்கெட் ஜீரோ குழுவின் 52-வது வார களப்பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே நடந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.

இக்களப்பணியினை குறித்து Target Zero பாலா அவர்கள் கூறியதாவது...

டார்கெட் ஜீரோ குழுவின் தொடர் 52 வது களப்பணி மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க களப்பணி வால்பாறை செல்லும் சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து நான்காவது வளைவு வரை உள்ள தூரத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை, வாட்டர் பாட்டில்களை முழுமையாக நான்கு பைகளில் அப்புறப்படுத்தினோம்......

போட்டோ - http://v.duta.us/uYtw2QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/u6Q-twAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬