கும்பக்கரை அருவி பராமரிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவிப்பகுதியில் பாதுகாப்பிற்காக போடப்பட்ட கம்பிகள் சேதமடைந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில், மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் கனமழை காரணமாக நீர் வரத்து இருக்கும். கும்பக்கரை அருவி ரம்யமான இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும்.

இந்த கும்பக்கரை அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இரும்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களுக்கு மன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவை முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்துள்ளன. ஆனால் இதுவரை அந்த சேதத்தினை சரி செய்யவில்லை. தற்போது கும்பக்கரை அருவியில் போதுமான நீர்வரத்து இல்லாததால் அந்த சேதமடைந்த கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய கம்பிகள் அமைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/J9qMwgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/NCc-kAAA