கோயில்🙏 அமைந்துள்ள ஊர்களில் சட்டவிரோத நுழைவுக்கட்டணம், பார்க்கிங் கட்டணம்: உயர் நீதிமன்றம்⚖ அதிரடி உத்தரவு

திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்கு பெரியபாளையம் மற்றும் எல்லாபுரம் ஊர்கள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமும், அப்பகுதியில் வாகன நிறுத்த கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஜி.டி.மாயாண்டி என்பவர் சட்டவிரோதமாகவும், அரசின் அனுமதி இல்லாமலும் பணம் வசூலிப்பதாகவும், அதை தடுக்க வேண்டுமெனவும் கோயிலின் அறங்காவலர் சேதுராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் மற்றும் அவை அமைந்துள்ள ஊர்களில் சட்டவிரோதமாக கட்டணங்களை வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬