கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு; கோவை - கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு;

  |   Coimbatorenews

கேரளாவில் நிபா வைரஸ் பரவியதை தொடர்ந்து, தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள், தமிழக சுகாதாரத்துறை சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்குள்ளான கல்லுாரி மாணவர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்மாநிலத்தில், வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதால், தமிழ் நாட்டில் அது பரவாமல் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரள எல்லையையொட்டி உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, பொது சுகாதாரத்துறை, ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது, கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாளையாறு, கொழிஞ்சாம்பாறை, மீனாட்சிபுரம், ஆனைகட்டி, வேலந்தாவளம் உள்ளிட்ட எட்டு இடங்களில் மருத்துவக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் ஒரு மருத்துவர், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர்.

இம்மருத்துவ குழுவினர், காய்ச்சல் பாதிப்புடன், கேரளாவில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து, முறையான சிகிச்சை அளிக்க, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாகனங்களின் டயர்களில் தடுப்பு மருந்துகளை தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/67NffgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/y87KOAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬