களக்காடு மலையில் சாரல் மழை தலையணைக்கு தண்ணீர் வரத்து: பொதுமக்கள் மகிழ்ச்சி

களக்காடு: களக்காடு மலையில் சாரல் மழை பெய்து வருவதால் தலையணையில் தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் மழை பெய்யவில்லை. இதனால் மலையில் கடும் வறட்சி நிலவியது. அருவி மற்றும் நீரோடைகள் தண்ணீர் இன்றி வறண்டது. தலையணையில் தண்ணீர் இன்றி பாறைகளாக காட்சி அளித்தன. இதுவரை வற்றாத நெட்டேரியங்கால் அருவியும் நீர்வரத்து இன்றி வறண்டது. வனப்பகுதியில் அனல் காற்று வீசியது. கடும் வெப்பத்தால் மரங்கள், செடிகள் காய்ந்தன. வறட்சியால் காட்டு தீ விபத்தும் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் களக்காடு மலையில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. நெட்டேரியங்கால், செங்கல்தேரி, முதலிருப்பான், கோழிக்கால், கருங்கல்கசம், குளிராட்டி, தலையணை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தீவிரமடைந்துள்ளது. களக்காடு ஊர் பகுதியிலும் அவ்வவ்போது பன்னீர் தூவுவது போல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழல் ஏற்பட்டுள்ளது. சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் களக்காடு மலையில் வறண்டு கிடக்கும் அருவி, நீரோடைகளில் தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. தலையணையில் இன்று காலை தண்ணீர் வரத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/RGdo7AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/2wyNpgAA