கழிவறைகளில் தண்ணீர், மின்சாரம் இல்லை... தூய்மை இந்தியா திட்டம் ‘பணால்’

செம்பட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பறைகள் கூட்டுக்கழிப்பறையாக கட்டப்பட்டுள்ளன. இங்கு மின்சாரம், தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. திறந்தவெளியை தொடர்ந்து பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அழகுபட்டி, ஆடலூர், பன்றிமலை, கசவனம்பட்டி, கோனூர், பொன்னிமாந்துரை, தருமத்துப்பட்டி, பலக்கனூத்து, சில்வார்பட்டி, கொத்தபுள்ளி உட்பட 24 கிராம ஊராட்சிகள் உள்ளன. தூய்மையான இந்தியாவை உருவாக்க தனிநபர் கழிப்பறை திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன்மூலம் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறைகள் ரூ.12 ஆயிரம் மானியத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தருமத்துப்பட்டி மற்றும் பல கிராம ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறைகள் கூட்டுக் கழிப்பறைகளாக மாறி வருகிறது. ஐந்து முதல் பத்து கழிப்பறைகளை மொத்தமாக ஊர் பொது இடங்களில் கட்டி அவற்றில் பயனாளிகள் பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு கட்டப்படும் கழிப்பறைகள் தரமில்லாமல் இருப்பதாலும், தண்ணீர் வசதி, மின்வசதி இல்லாததாலும் பொதுமக்கள் பயன்படுத்த தகுதியில்லாமல் போய்விடுகிறது. இதுதவிர இரவு நேரங்களில் யாரும் அந்த கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிப்பறைகள் திறப்புவிழா காண்பதற்கு முன்பே பாதி இடிந்தும், கதவுகள் பெயர்ந்தும் வருகின்றன. மேற்கூரைகள் இல்லாமல் இருப்பதால் இத்திட்டம் தோல்வியை அடைந்துள்ளது....

போட்டோ - http://v.duta.us/imeWvwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/M0r6iQAA