சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி: சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியான சோகம்!

  |   Chennainews

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை திருவலிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயன்(30), புனிதராணி(29), சரண்யா(21) மற்றும் ஜெசினி(6) ஆகிய 4 பேரும் கடந்த 3 நாட்களாக தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு விடுதி அறையினுள் அவர்கள் 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் பணி நிமித்தமாக அந்த அறைக்குச் சென்ற விடுதி ஊழியர் ஒருவர், கதவை தட்டியும் திறக்காததால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து அறையினுள் சென்று பார்த்துள்ளார்.

அப்போது 4 பேரும் விஷம் அருந்திய நிலையில் மயக்கமுற்று கிடப்பதை கண்டு பதறிய அவர், மற்றவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய ஜெயன், புனிதாராணி, சரண்யா, ஜெசினி ஆகிய 4 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 6 வயது குழந்தை ஜெசினிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருவல்லிக்கேணி போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ - http://v.duta.us/k4VHvAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/03irugAA

📲 Get Chennainews on Whatsapp 💬