டிடிவி: 🔈"கட்டாய கல்வி📚 உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் பழனிச்சாமி அரசு"

கட்டாய கல்வி📚 உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் மக்கள் விரோத பழனிச்சாமி அரசு என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்😡.

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்படும் நிதியை பழனிச்சாமி அரசு திடீரென பெருமளவு குறைத்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இம்முடிவைத் திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில்📜 தெரிவிக்கப்பட்டுள்ளது.