தாம்பரம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கார் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

  |   Chennainews

சென்னை: தாம்பரம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் அருகே கேம்ப் ரோடு மப்பேடு சாலையில் கார் ஒன்று அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தது. அதிவேக பயணத்தால் ஏற்படும் விபத்தை தடுக்க வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது மோதிய கார் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த இருசக்கர வாகனங்களில் இருந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் தூக்கி வீசப்பட்டனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய அந்த கார் நிற்காமல் சென்றுவிடவே அடிபட்ட 4 பேரும் துடித்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடிபட்ட 4 பேரில் கிளாட்சன், விக்ரம் ஆகிய இருவர்களும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். விக்ரம் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில் கிளாட்சனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் சிக்கிய ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சாந்தி சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போட்டோ - http://v.duta.us/3x8wDAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/KlHLyAAA

📲 Get Chennainews on Whatsapp 💬