தேவாரத்தில் பதற்றம் மக்னா யானை மிதித்து தோட்ட காவலாளி பலி

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில், தோட்ட காவலாளியை மக்னா யானை மிதித்து கொன்றது. இதில் படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தேவாரம் உள்ளது. இந்த ஊர் அருகில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. இவற்றில் ஒற்றையாக திரியும் மக்னா யானை கடந்த 4 வருடங்களாக சாக்குலூத்து, பெரம்புவெட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படும் கப்பை, சோளம் உள்ளிட்ட பயிர்களையும், தென்னை மரங்களையும் துவம்சம் செய்து வருகிறது. அட்டகாசம் செய்யும் இந்த யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று தேவாரம் மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் வனத்துறை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றிரவு ஆனைமலையன்பட்டியில் கர்ணன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த மக்னா யானை, அங்கு காவலில் இருந்த அணைப்பட்டியை சேர்ந்த அய்யாவு(65) என்பவரை மிதித்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து அருகில் உள்ள தோட்டத்தில் படுத்திருந்த மேலச்சிந்தலைச்சேரியை சேர்ந்த கெப்புசாமி(63) என்பவரையும் மக்னா தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் யானையின் பிடியிலிருந்து தப்பியோடினார். பின்னர் அங்கிருந்த 2 ஆடுகளை அந்த யானை தாக்கி கொன்றது. இன்று அதிகாலை தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு காயத்துடன் விழுந்து கிடந்த கெப்புசாமியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை க.விலக்கு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் யானை தாக்கியதில் இறந்து போன அய்யாவுவின் உடலை எடுக்க விடாமல் தடுத்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

போட்டோ - http://v.duta.us/F46q5gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/RWgYBQAA