பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ள மாவோயிஸ்டுகள்!

  |   Chennainews

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் மாளிகை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புகாராகும். இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாவோயிஸ்டுகள் முதன்முறையாக தலையிட்டுள்ளனர். அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன் என விளக்கமளித்துள்ளனர். அதாவது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து இஸ்லாமிய அரசியல் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் வாடும் தமிழ்த்தேசிய போராளிகள் ஐவரை விடுதலை செய்ய வேண்டும்.

மேலும், UAPA உள்ளிட்ட அனைத்து கொடுஞ் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மாவோயிஸ்டு அரசியல் சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளை பிறக்கக்கூடாது. மாவோயிஸ்டு சிறைவாகசிகளுக்கு முறையாக மருத்துவ சிகிச்சை தர மறுத்து சித்ரவதை செய்யக்கூடாது. மாவோயிஸ்டு அரசியல் சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட பிணையை சட்ட விரோதமாக ரத்து செய்து, அவர்களை நிரந்தரமாக சிறை வைக்க சதி செய்யக்கூடாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாவோயிஸ்டு இயக்க நடவடிக்கைகள் பொதுவாக ரகசியமாகவே இருக்கும். ஆனால், அன்மை காலமாக அவர்கள் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றனர். தென் மாநிலத்தில் மாவோயிஸ்டு இயக்கத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதனை முறியடிப்பதில் காவல்துறை தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டோ - http://v.duta.us/ISbBWgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/VOC3dQAA

📲 Get Chennainews on Whatsapp 💬