தமிழகத்தில் 19,426 👨🏻‍🏫ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்❗ - 🏫பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் 🏫பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் உபரியாக உள்ள 👩🏻‍🏫ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 279 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 17 ஆயிரத்து 147 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். மேலும், ஜூலை 9ம் 📆தேதி துவங்கவுள்ள கலந்தாய்வில் உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் 🏛மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்தவும் ✍உத்தரவிட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬