பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம்: நடிகர் கமல் பேட்டி

  |   Chennainews

சென்னை: நடிகர் ரஜினி வாக்களிக்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது, அது தபால் துறையின் பிழையாக இருக்கலாம் என்று நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்குகள், பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள், நடிகைகள், நாடக கலைஞர்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 1475 வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,171 என்பது குறிப்பிடத்தக்கது.

2019-2022ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னை அபிபுல்லா சாலையில் உள்ளது. சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 23ம் தேதி (இன்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் நாசர் தலைமையின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த விஷாலின் ‘பாண்டவர் அணி’ சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியை எதிர்த்து டைரக்டரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி களம் இறங்கியிருக்கிறது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த், துணைத்தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/kdQq7wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Usf8yQIA

📲 Get Chennainews on Whatsapp 💬