👥மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுடன் கூடிய 🚍பேருந்து பயண அட்டை

கரூர் மாவட்டம் வாங்கல் கிராமத்திலுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை 🚌போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 🎉துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் 🗣பேசிய அவர், கரூர் மாவட்டத்திலும் சில இடங்களில் உள்ள 🌊தண்ணீர் பிரச்சனையை போக்க, டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் 🗣கூறினார். மேலும் தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுடன் கூடிய இலவச 🚍பேருந்து பயண அட்டை வழங்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬