2வது நாளாக இன்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் மருத்துவ கண்காட்சி

  |   Chennainews

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி இன்று 2 வது நாளாக நடைபெறுகிறது. இன்று விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.சென்னை தினகரன் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் ஹெல்த் அண்டு பிட்னஸ் தொடர்பாக மாபெரும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் சர்வதேச மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, நியூட்ரா பாக்ஸ், எத்னிக் ஹெல்கேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஹெல்த் அண்டு பிட்னஸ் - 2019” என்ற மாபெரும் மருத்துவ கண்காட்சி நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த மாபெரும் மருத்துவ கண்காட்சியை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களான ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம்.எஸ். அசோகன், நியூட்ரா பாக்ஸ் தலைமை செயல் அதிகாரி நிகர் தேசாய், எத்திக் ஹெல்கேர் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் யோக வித்யா, மிஸ்டர் வேல்டு எம். அரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தினகரன் நாளிதழின் மார்கெட்டிங் தலைமை பொது மேலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.இந்த கண்காட்சியில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனைகளின் அரங்குகள், சித்தா, யுனானி, அக்குபஞ்சர் மருத்துவமனைகளின் அரங்குகள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள்,வாசனை திரவியங்கள், மருத்துவ உணவுப் பொருட்கள், மருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/DHKCNQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/u6RZ_AAA

📲 Get Chennainews on Whatsapp 💬