காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதி: ஆட்சியர் உத்தரவு

  |   Chennainews

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ள வைபவத்தில் அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்து 12 நாளில் 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

13ம் நாளான நேற்று, சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணி முதல் கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் திணறியது. வடக்கு மாட வீதி, தெற்கு மாடவீதி, செட்டித்தெரு சந்திப்பு, டோல்கேட் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் வெள்ளமென திரண்டனர். இந்த வைபவத்தில் அத்தி வரதர் வெள்ளை தாமரை, மஞ்சள் ரோஜா, செண்பக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுவதாவது; காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும்....

போட்டோ - http://v.duta.us/6aIkAgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/DAcYRwAA

📲 Get Chennainews on Whatsapp 💬