கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடுயுமா? ஆய்வு தொடங்கியது

  |   Coimbatorenews

நான்கு வழித்தடங்களில், எங்கிருந்து எவ்வளவு துாரம் மேற்கொள்ளலாம் என, ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மார்ச் வரை இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கோவை நகர்ப்பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு பல மணி நேரமாகிறது. அதனால், தனி நபர் வாகனங்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், கோவை நகர்ப்பகுதி மட்டுமின்றி, பணி நிமித்தமாக, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம், அன்னுார் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்வதால், நெருக்கடி அதிகமாகிறது.அதனால், கோவையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், 'மெட்ரோ' ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தகுதியான நகராக, கோவையை தேர்வு செய்து, கடந்த, 2011ல் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 2017 வரை, தமிழக அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல், கிடப்பில் போட்டது....

போட்டோ - http://v.duta.us/KSqSCQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ag3w2QAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬