சென்னை, நாகையில் 🇮🇳தேசிய புலனாய்வு முகமை 👮‍♂அதிகாரிகள் 🔎சோதனை

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் 📆தினத்தன்று, தற்கொலைப் படைத் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 👥சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை 💺அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோரது 🏘வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, 6⃣ மணிநேரத்திற்கு பின்னர் நிறைவு பெற்றது. அவர்களது வீடுகளில் இருந்து 9 📱செல்போன்கள், 15 சிம்கார்டுகள், 3 💻மடிக்கணினி, பென் டிரைவ் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இதேபோல், சென்னை மண்ணடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 🔍சோதனை நடத்தியதில் பென் டிரைவ் உள்ளிட்ட சில எலக்ட்ரானிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் நேரில் ஆஜராகும்படி இருவருக்கு 📜சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬