சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களால் பத்திர பதிவு டோக்கனில் மோசடி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

  |   Chennainews

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்ய டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இடைதரகர்களே டோக்கனை பிளாக் செய்து விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்தாண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இனி வருங்காலங்களில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைனில் பத்திரம் பதிவு செய்து கொள்ள முடியும். முதலில் ஆன்லைனில் பத்திரப் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்து டோக்கன் பெற வேண்டும். அதன்பிறகு, விண்ணப்பித்தவர்கள் தாங்கள் குறிப்பிட்ட தேதியில் பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம்.ஆனால், ஆன்லைனில் பொதுமக்கள் விண்ணப்பித்தால் டோக்கன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இடைதரகர்கள் ஆன்லைன் மூலம் ஏதாவது ஒரு ஆவணத்தை வைத்து விண்ணப்பித்து டோக்கன் பெறுவதாக கூறப்படுகிறது. அந்த டோக்கனை வேறு யாராவது பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. சார்பதிவாளர்களும் பதிவு செய்த டோக்கனுக்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கேட்பதில்லை. அவர்களும் பணத்தை பெற்றுக்கொண்டு இந்த முறைகேடுக்கு துணை போகின்றனர்....

போட்டோ - http://v.duta.us/dpVm-gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/OJ7U6wAA

📲 Get Chennainews on Whatsapp 💬