வேலூரில் தி.மு.க. 💺பிரமுகரின் தம்பி 🏠வீட்டில் ரூ. 27 💰லட்சம் பறிமுதல்

சத்துவாச்சாரியை அடுத்த வசூர் என்ற இடத்தில் திமுக 👤பிரமுகர் வசூர் நடராஜன் என்பவரின் தம்பியும் ரியல் எஸ்டேட் 💺அதிபருமான ஏழுமலை என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் 🔍சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 🏡வீட்டில் இருந்தவர்கள் பை ஒன்றில் பணத்தை கட்டி வெளியில் வீசியதாகக் 🗣கூறப்படுகிறது. அதனை அதிகாரிகள் கைப்பற்றியபோது 27 💰லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. அது தன்னுடைய பணம் தான் ஏழுமலை ஒப்புக்கொண்டதாக 👮‍♂அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அதிகப்படியான 💸பணம் கைப்பற்றப்பட்டதன் காரணமாக 🗳தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬