வெள்ளப் பெருக்கை அறிவிக்க சைரன் பொருத்தக் கோரிக்கை

  |   Coimbatorenews

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சைரன் ஒலி எழுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் மேட்டுப்பாளையம் நகராட்சி முன்னாள் நகர் மன்ற தலைவர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, வன பத்திரகாளியம்மன் கோயில் பகுதி, நெல்லித்துறை ஆகிய இடங்கள் வழியாக பவானி ஆறு செல்கிறது. இதில் தினமும் ஏராளமானோக் குளிக்க வருகின்றனர். பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்குப் பின் திறத்துவிடப்படும் தண்ணீர் பவானி ஆறு வழியாகச் செல்கிறது.

இதில் வன பத்திரகாளியம்மன் கோயில், நெல்லித்துறை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி கடந்த 5 மாதங்களில் ஆற்றில் குளித்த 3 பெண்கள் உள்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 5 எச்.பி திறன் கொண்ட மின்மோட்டார் சைரன் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் பொருத்தப்பட்டு ஆற்றில் வெள்ளம் வரும்போது சைரன் ஒலி எழுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த சைரன் அகற்றப்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/6aFCnwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/g25V7AAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬