கட்டாய ஹெல்மெட் வழக்கில் 🤵நீதிபதிகள் அதிருப்தி😳

இளவேனில்
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்குவந்தது. அப்போது, முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பதிவான ஒரு நிமிட கண்காணிப்பு கேமரா காட்சிகள் அரசுதரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதிகள், 300க்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், ஆனால் அவர்களை தடுக்காமல் காவல்துறையினர் சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிவதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், "கட்டாய ஹெல்மெட் விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை வாகன ஓட்டிகள் உணராததற்காக காவல்துறை செயலற்றிருப்பதாக கூற முடியாது" என்று தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லைஎன்றால், உயரதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்து விசாரணையை ஜூலை 26ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬