🏛மாநிலங்களவையில் நாளை 👥எம்.பி.க்கள் பதவியேற்பு👍

✍இளவேனில்🌄

மாநிலங்களவை 🌱அதிமுக எம்பிக்களான மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுன், ரத்தினவேல், லட்சுமணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது😯. இதனையடுத்து, 🏛தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஏற்கனவே நடைபெற்ற 🗳தேர்தலில், 🌞திமுக மற்றும் 🌱அதிமுக தரப்பில் இருந்து தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்👍. 🌞திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்🎉. இந்நிலையில், நாளை ⌚காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர்கள் மூவரும், அதே போன்று 🌱அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் நாளை பதவியேற்க🎊 உள்ளனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬