திருச்சி 🏫கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் - 28 பேர் ⛓கைது

திருச்சி - திண்டுக்கல் சாலையில் அமைத்துள்ள தனியார் 🏫கல்லூரியில் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 👥மாணவர்களிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நான்காம் ஆண்டு மாணவர்கள் மூன்றாம் படிக்கும் மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கற்கள், பாட்டில்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 28 மாணவர்கள் மீது வழக்கு ✍பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மாணவர்களை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ⚖நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 👮‍♂காவல்துறையினர் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬