மேட்டூர் 🌊அணைக்கு நீர்வரத்து ⏫அதிகரிப்பு

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து 🌨மழை பெய்து வருவதால், அங்குள்ள 🌊அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 7 ஆயிரத்து 200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8 ஆயிரத்து 200 கன அடியாக ⏫அதிகரித்துள்ளது. அதே வேளையில் அணையில் இருந்து 💧நீர் வெளியேற்றத்தை காட்டிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு ஒரு அடி வீதம் ⬆உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 14.36 டி.எம்.சி. ஆகவும், அணையின் 💦நீர் மட்டம் 44.22 அடியாகவும் உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬