🌊அணைகள் பாதுகாப்பு மசோதா 🏛மக்களவையில் தாக்கல்

நாடு முழுவதும் 🌊அணைகளின் பாதுகாப்புக்கு ஒரே வழிமுறைகளை வகுக்கும் திட்டத்தில் மத்திய அரசு அணை பாதுகாப்பு 📜மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதன்படி அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் படி ஒரு 🏛மாநிலத்துக்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு 👥அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய அணை ஆணையம் மேற்கொள்ளும்.
தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய 4⃣ அணைகள் கேரளாவில் உள்ளது. ஆனால் மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா தமிழகத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள 🙄வழிவகுக்கிறது. இதனால் இந்த மசோதாவுக்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் 😠எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அணைகள் பாதுகாப்பு மசோதா 🏛மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬