ஆணவக் 🙄கொலைகள் விவகாரம் - 🏛உயர் நீதிமன்றம் அதிருப்தி

ஆணவ கொலைகள் தொடர்பாக 📰பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை 🏛உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை 🗣விசாரணைக்கு எடுத்து கொண்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசுத் தரப்பில் 📜அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவ கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் 🎙தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த ⚖நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது 🤷‍♂சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி 👮‍♂ஐஜியை, நாளை நேரில் ஆஜராக ✍உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬