இது கோவை வாகன ஓட்டிகளின் சோதனை காலம்; போக்குவரத்து நெரிசலால் திணறும் நகரம்

  |   Coimbatorenews

கோவை மாநகரை சுற்றிலும் பல்வேறு இடங்களில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது கோவை வாகன ஓட்டிகளின் சோதனை காலமாக மாறியுள்ளது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. இருப்பினும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் நகருக்குள் அனுமதிப்படுவதால் கடுமையான நெரிசல் உண்டாகிறது.

** கோவை - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி மேம்பால பணிகள்

** கோவை-திருச்சி சாலை சுங்கம் மேம்பால பணிகள்

** ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பால பணிகள்

** சித்தாபுதூர் உயர்மட்ட மேம்பால பணிகள்

** அவிநாசி சாலை கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள்

** மேட்டுப்பாளையம் சாலை கவுண்டர் மில்ஸ் உயர்மட்ட மேம்பால பணிகள்

** கோவை ரேஸ்கோர்ஸ் சாலை கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள்

கோவை-அவினாசி சாலையில் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து நவ இந்தியா சிக்னல் வரை கடந்த 20 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவை அவினாசி மேம்பாலத்தில் இருந்து விமானநிலையம் வரை உள்ள 6 கிலோ மீட்டர் தூர சாலையை கடப்பதற்கு முன்பு 45 முதல் 50 நிமிடங்கள் ஆகும். ஆனால் தற்போது லட்சுமி மில் சந்திப்பை கடப்பதற்கே 30 நிமிட நேரம் ஆகிறது. இதற்கு காரணம் மின்கேபிள்கள் பதிப்பதற்கான பள்ளம் சாலையோரம் வெட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடம் இல்லாமல் உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கிறது....

போட்டோ - http://v.duta.us/onz4kwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/stzjAAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬