கர்நாடக 🏛சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை 🗳வாக்கெடுப்பு

கர்நாடகத்தை ஆட்சி செய்த மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் 1⃣5⃣ பேர் ராஜினாமா செய்ததால், குமாரசாமி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை 🤷‍♂நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, 105 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கர்நாடக பாஜக 💺தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை 🗳வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே 1⃣7⃣ பேர் தகுதி நீக்கத்தால் கர்நாடக சட்டப்பேரவை பலம் 208 ஆக ⬇குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬