தமிழக 🏛அரசுக்கு எதிராக போராடுவேன் - முகிலன் 🗣ஆவேசம்

சமூக 👤ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து 🚉ரயிலில் புறப்பட்ட பிறகு திடீரென காணாமல் போன இவர், திருப்பதி ரயில் நிலையத்தில் 👀கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அரசுக்கு எதிராக பேசியதாக ✍பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கு தொடர்பாக முகிலனை இன்று 👮‍♂காவல்துறையினர், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த ⚖நீதிபதி, வரும் ஆகஸ்ட் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "என் மீது எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து 🗣போராடுவேன்" என ஆவேசமாக கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬